உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை கீரைக்காரனுாரில் வனத்துறை கண்காணிப்பு

வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தை கீரைக்காரனுாரில் வனத்துறை கண்காணிப்பு

மேட்டூர், வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிறுத்தையை பிடிக்க, கீரைக்காரனுாரில் மேட்டூர் வனத்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் மேச்சேரி, கூனாண்டியூர் ஊராட்சி கீரைக்காரனுார் கிராமம், மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதி கரையோரம் உள்ளது. அந்த கிராமத்தை சுற்றி, பச்சியப்பன் தெரு, நல்லப்பன் கொட்டாய், கருங்கரடு உள்ளிட்ட தெருக்கள், கரடு பகுதிகளாக உள்ளன.அப்பகுதியில் ஒரு மாதமாக சிறுத்தை பதுங்கி, நீர்பரப்பு பகுதியில் மீன்கள், கிராமத்தில் நாய்கள், கோழிகளை பிடித்து கரடு பகுதிக்கு கொண்டு சென்று விடுகின்றன. நேற்று முன்தினம் இரவு, பச்சியப்பன் தெரு விவசாயி குமாரசாமியின், வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச்சென்றது.ஒரு வாரத்துக்கு முன், அருகில் உள்ள கூத்தனுார் தெருவில், அலமேலு என்பவர் வளர்த்து வந்த நாயை சிறுத்தை பிடித்துச்சென்றது.இதுகுறித்து விவசாயிகள், மீனவர்கள் தகவல்படி, மேட்டூர் சரக வன ஊழியர்கள், சில நாட்களாக அப்பகுதியில் ரோந்து சென்று, இரவில் சிறுத்தை கிராமத்தில் நுழையாமல் இருக்க, வானவெடிகளை வெடித்தனர். மேலும் இரவில் யாரும் தனியே வெளியே செல்ல வேண்டாம் என, மக்களிடம் அறிவுறுத்தினர்.ஆனால் நேற்று முன்தினம் சிறுத்தை, நாயை கவ்விச்சென்றதால், நேற்று மதியம் வன ஊழியர்கள், பச்சியப்பன் கொட்டாய் சென்றனர். அங்கு வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர், 3 குழுக்களாக பிரிந்து அருகிலுள்ள கரடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி