வனத்தில் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி
சேலம்: சேலம் மாவட்ட வனப்பகுதியில் காட்டு மாடு, மான் உள்ளிட்ட விலங்குகள், பறவை இனங்கள், பூச்சி இனங்கள், சந்தனம், நாவல் உள்ளிட்ட அரிய வகை மர இனங்கள் உள்ளன. வனம், உயிரினங்களை பாதுகாக்க, கோடை காலத்தை முன்னிட்டு வனத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதற்கான பணி, மாவட்ட வன அலுவலர் கஷ்யாப் சசாங்க் ரவி உத்தரவுப்படி நடந்து வருகி-றது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வனத்தில் மழைக்காலங்களில் தாவரங்கள் செழித்து அடர்ந்து வளரும். கோடை காலம் தொடங்கும்போது இலைகள் உதிர்ந்து, காய்ந்து சருகுகள் கிடக்கும். தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தால் புல்வெளி காய்ந்து வருவதால், எளிதில் தீ பிடித்து பரவும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படு-வதை தடுக்க வனத்தையொட்டியை சாலையின் இருபுறமும், வனப்பகுதி எல்லை பகுதி, ஏற்கனவே இருக்கும் பாதைகளில் தீ தடுப்பு கோடுகள் கடந்த ஜனவரி இறுதியில் இருந்து தற்போது வரை அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி உள்ளிட்ட வனச்சரகத்தில் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தீ தடுப்பு கோடுகள் ஒரு பாதை போல் வனப்பகுதியை சுற்றி பல கி.மீ., நீளத்துக்கு, வெற்று தரை உருவாக்கப்படுகிறது. இப்படி செய்வதால் உள்காட்-டிற்குள் தீ பரவுவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.