உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் அமைச்சரின் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சரின் மனைவி காலமானார்

சேலம்: தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சரான, மறைந்த, சேலத்தை சேர்ந்த ஆறுமுகத்தின், 2வது மனைவி லீலாவதி, 67. சென்னையில் வசித்த இவர், சில நாட்களாக உடல்நிலை பாதிக்-கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். துணை முதல்வர் உதயநிதி உள்-ளிட்ட தலைவர்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல், நேற்று இரவு, 8:15 மணிக்கு, சேலம் கொண்டு வரப்பட்டு, கன்னங்குறிச்சியில் உள்ள அவரது மகனும், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான பிரபு இல்-லத்தில், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அமைச்சர்கள் நேரு, ராஜேந்திரன், எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம், சேலம் மேயர் ராமச்சந்திரன் ஆகியோர், லீலாவதி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பூலாவரியில் உள்ள தோட்டத்தில், இன்று லீலாவதி உடல் அடக்கம் செய்யப்-பட உள்ளதாக, கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ