அவதுாறு நோட்டீஸ் ஒட்டியவர் மீது முன்னாள் எம்.எல்.ஏ., புகார்
ஓமலுார்: ஓமலுார் தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலக சாலை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்-டிருந்தது. அதில் முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் புகைப்-படம் இருந்தது. மேலும், 'அனைத்துவித பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற சகல வித்தைகளையும் தனது கைதேர்ந்த சிஸ்யர்களால் செய்து தரப்படும்' என கூறப்பட்டிருந்-தது. தவிர, 'வெற்றிவேல் சுவாமிகள், கருப்பூர்' என அச்சிடப்பட்-டிருந்தது.இதனால் நேற்று, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஓமலுார் போலீசில் புகார் அளித்தார். அதில், 'என் பெயருக்கு களங்கம் ஏற்-படுத்தும்படி துண்டு பிரசுரம் மூலம் அவதுாறு செய்திகள் அடங்-கிய நோட்டீஸ் தயாரித்து பரப்புரை செய்தவர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். போலீசார் வழக்-குப்பதிந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.