தொழில் முனைவோருக்கு இலவச பயிற்சி சேலம், நாமக்கல் பெண்களுக்கு அழைப்பு
சேலம்: சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 100 பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் அறிக்கை: மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தொழில் முனைவோராக விருப்பமுள்ள, 100 பெண்களுக்கு அதற்கான பயிற்சியுடன் சணல் பொருட்களில் இருந்து லேப்டாப் பேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பது குறித்து ஒரு மாத இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதில் பயன்பெற, 18 முதல், 45 வயது வரையுள்ள பெண்கள், செப்., 21ல் சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரி, ராசிபுரம் ராமஜெயம் பயிற்சி நிறுவனத்தில் நடக்க உள்ள நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 88258 12528 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் பெயரை முன்பதிவு செய்து, தேவையான விபரங்களை பெற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.