உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுவன் ஓட்டிய மொபட் விபத்தில் சிக்கி நண்பன் படுகாயம்

சிறுவன் ஓட்டிய மொபட் விபத்தில் சிக்கி நண்பன் படுகாயம்

ஏற்காடு: ஏற்காடு, அத்தியூரை சேர்ந்த, சுப்ரமணி மகன் பூவரசன், 16. இவர், நேற்று மதியம், 2:00 மணிக்கு 'டியோ' மொபட்டில் அமர்ந்து, ஒண்டிக்கடை நோக்கி சென்றுகொண்டிருந்தார். இவரது நண்பரான, மற்றொரு, 16 வயது சிறுவன் ஓட்டினான்.ஏற்காடு பஸ் ஸ்டாண்டை அடுத்து சிறிது துாரம் சென்றபோது, முன்புறம் நின்ற காரை பார்த்து, சிறுவன் பிரேக் போட்டுள்ளார். அதில் தடுமாறி விழுந்த பூவரசன், கட்டுப்பாட்டை இழந்த மொபட்டுடன், 50 அடி துாரம் இழுத்துச்செல்லப்பட்டார். ஓட்டிய சிறுவனுக்கு காது, கைகளில் காயம் ஏற்பட்டது.பூவரசனுக்கு தலை, கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ஏற்காடு போலீசார், சிறுவர்களை மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.பூவரசனுக்கு படுகாயம் ஏற்பட்டிருந்ததால், மேல் சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போக்குவரத்து போலீசார், சிறுவர்கள், வாகனம் ஓட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ