உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் காந்தி மைதானம்

நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் காந்தி மைதானம்

சேலம், நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், காந்தி மைதானத்தில் விழா ஏற்பாடு நடக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதற்கு வலசையூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,474 மாணவர்கள், காந்தி மைதானத்தில், டி.ஆர்.ஓ., ரவிக்குமார், ஆர்.டி.ஓ., அபிநயா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரி கள் முன்னிலையில், தேசபக்தி, விழிப்புணர்வு பாடல்களுக்கு நடன ஒத்திகையில் ஈடுபட்டனர்.அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மைதானம், போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், சோதனை நடத்தி வருகின்றனர்.சேலம் மாநகரம் சார்பில், போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தலைமையில், 600 போலீசார், மாவட்டத்தில், எஸ்.பி., கவுதம்கோயல் உத்தரவுப்படி, 400 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். புது பஸ் ஸ்டாண்ட், வழிபாட்டு தலங்களில், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் ரயில்வே சந்திப்பில், நடைமேடை பகுதிகளில் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் கருவியுடன், ரயில்வே போலீசார் சோதனையை தொடர்கின்றனர்.மதுக்கடைக்கு விடுமுறைசுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உரிமம் பெற்ற மதுக்கடைகள், ஓட்டல், கிளப்புகளில் இயங்கும் பார், டாஸ்மாக் மதுக்கடைகள், அத்துடன் இணைந்து செயல்படும் பார் உள்ளிட்ட அனைத்தும் நாளை மூடப்பட வேண்டும். மீறி மது விற்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை