உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

வாழப்பாடி,வரும், 27ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வாழப்பாடி போலீஸ் உட்கோட்ட பகுதியில், விநாயகர் சிலை வைக்கும் விழா ஏற்பாட்டாளர்களுடன், பாதுகாப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம், நேற்று நடந்தது. வாழப்பாடி டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்; சிலை, 10 அடி உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்; சிலை வைத்த, 3 நாட்களுக்குள் எடுத்துச் சென்று கரைத்து விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை