கஞ்சா பறிமுதல் 2 வியாபாரி கைது
சேலம், சேலம், தாதகாப்பட்டி, தாகூர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 33. அங்குள்ள பொது கழிப்பிடம் அருகே நேற்று, டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் நின்றிருந்தார். அப்போது அன்ன தானப்பட்டி போலீசார் ரோந்து வந்த நிலையில், சீனிவாசன் பைக்கில் சோதனை செய்தபோது, 1.3 கிலோ கஞ்சா, விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவரது வாக்குமூலப்படி, மூணாங்கரடு, தண்ணீர் தொட்டி அருகே நின்றிருந்த சபரிநாதன்,21, என்பவரிடம், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் ஏற்கனவே, கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தனர்.