மேலும் செய்திகள்
5 வயது சிறுமி பலாத்காரம் 17 வயது சிறுவன் கைது
23-Aug-2024
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி, பரவக்காட்டை சேர்ந்தவர் பெரியசாமி, 65. இவர், 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததால், வாழப்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:விவசாய கூலி வேலை செய்து வந்த, 15 வயது சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவர், 3 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில், சிறுமி காட்டு வேலைக்கு சென்றபோது பக்கத்துக்காட்டில் விவசாயம் செய்த பெரியசாமி, சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவரை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
23-Aug-2024