உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மணமான 4 மாதத்தில் சிறுமி தற்கொலை

மணமான 4 மாதத்தில் சிறுமி தற்கொலை

கெங்கவல்லி:கெங்கவல்லி, தெடாவூர், பள்ளக்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் புவனேஸ்வரி, 17. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த தங்கவேல் மகன் முத்துக்குமார், 30, என்பவருக்கும், 4 மாதங்களுக்கு முன் திருமணமானது. இதனால் புதுமண தம்பதியை விருந்துக்கு அழைக்க, முத்துக்குமாரின் சகோதரி சத்யா, நேற்று காலை, 11:00 மணிக்கு, அவர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து பார்த்தார். அப்போது புவனேஸ்வரி துாக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அவரை மீட்ட உறவினர்கள், கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறியதாவது: புவனேஸ்வரி, வேறு ஒருவரை காதலித்தார். இதை அறிந்த பெற்றோர், 30 வயதுடைய உறவினருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதில் சிறுமி விரக்தி அடைந்தார். இந்நிலையில் வயிற்று வலி அதிகம் இருந்ததால், தற்கொலை செய்துகொண்டார். 17 வயதில் திருமணம் செய்து வைத்த நிலையில், அவர் இறந்ததால், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை பெறப்பட்ட பின், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி