ஜி.எல்., ஆர்ப்பாட்டம்
சேலம்: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள்(ஜி.எல்.,), கடந்த, 13 முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சேலம் அரசு கலைக்கல்லுாரி முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ள, 57,700 ரூபாய் ஊதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகிகள் முருகேசன், மணிகண்டன், யுவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.