உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 5,000 பால் பண்ணை தொடங்க அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு

5,000 பால் பண்ணை தொடங்க அரசு ரூ.150 கோடி ஒதுக்கீடு

மேட்டூர், தேசிய பால் தினத்தை ஒட்டி, சேலம் மாவட்டம் மேச்சேரி, புக்கம்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில், பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: புக்கம்பட்டி கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டேன். பெரும்பாலானோர், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரினர். படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், 5,000 பேருக்கு, தலா, 3 லட்சம் ரூபாய் செலவில் சிறு பால் பண்ணைகள் தொடங்க, அரசு, 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கு வழங்கும் கடனுக்கு, 4 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், சிறு பால் பண்ணைகள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., ரவிக்குமார், சேலம் எம்.பி., செல்வகணபதி, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி