உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு கல்லுாரியில் சேர்க்கை நாளை முதல் கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் சேர்க்கை நாளை முதல் கலந்தாய்வு

சேலம், சேலம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் செண்பகலட்சுமி அறிக்கை: சேலம் அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 2ல்(நாளை) தொடங்க உள்ளது. அதன்படி, 2, 3ல் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளி, முன்னாள் படை வீரர் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்க உள்ளது. ஜூன், 4ல், 300 முதல், 400 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள்; 5ல், 250 முதல், 299 மதிப்பெண்; 6ல், 200 முதல், 249 மதிப்பெண்; 11ல், 175 முதல், 199 மதிப்பெண்; 12ல், 174க்கு கீழ் பெற்றவர்களுக்கு பொது கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்கு வரும் மாணவர்கள், ஆன்லைன் விண்ணப்ப படிவம், டி.சி., 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி, வருமான சான்றிதழ், ஆதார் கார்டு, மார்பளவு புகைப்படம் - 10 உள்ளிட்ட சான்றிதழ்களுடன், தலா, 4 நகல்கள் வீதம் கொண்டு வரவும். காலை, 9:30க்குள் கல்லுாரி வளாகத்துக்குள் வர வேண்டும். தாமதமாகவோ, உரிய நாட்களில் பங்கு பெறாதவர்கள், உரிமை கோர முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !