குழந்தை பாலினம் அறிவிப்பு அரசு மருத்துவர் சஸ்பெண்ட்
சேலம், சேலம் அரசு மருத்துவமனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையத்தில், மருத்துவர் தியாகராஜன், 48, பணியாற்றினார். இவர், பணம் பெற்றுக்கொண்டு, கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிவித்து வந்தார். இதற்கு புரோக்கராக ஸ்ரீராம், 50, என்பவர் செயல்பட்டார். இதனால் இருவரையும், அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். தியாகராஜன் கைது செய்யப்பட்டதால், துறை நடவடிக்கை எடுக்க, மருத்துவமனை சார்பில், மருத்துவத்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனால் நேற்று, தியாகராஜன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.