அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட பேரவை கூட்டம்
மேட்டூர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், மேட்டூர் வட்ட கிளை கூட்டம் நேற்று தலைவர் காமராஜ் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் வெற்றிவேல் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்குமார், மாநில செயலாளர் ரமேஷ்குமார், வட்ட செயலாளர் சிங்கராயன், பொருளாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிளை வரவு, செலவு கணக்கு மற்றும் ஊழியர்கள் நலனுக்காக நடத்தப்பட்ட போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.