உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமாயி தலைமை வகித்தார்.அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்ததை போன்று தமிழக அரசும், 3 சதவீத அகவிலைப்படியை ஜூலை 1 என முன் தேதியிட்டு அறிவித்தல்; அரசு உதவி பெறும் கல்லுாரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செயலர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு நுாலகர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ