மேலும் செய்திகள்
பேன் போடுங்க சார்... மாணவர்கள் அவதி
11-Jun-2025
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டியில், 1972ல் கட்டிய ஓட்டு கட்டடத்தில், அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. அங்கு, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு புதிதாக, 4 வகுப்பறைகள் கொண்ட மாடி கட்டடம் கட்ட, 70 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கியது. நேற்று பூமி பூஜை விழா நடந்தது. ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், தலைமை ஆசிரியர் சிவசக்தி, ஒன்றிய பொறியாளர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் காந்திபுரம், சந்தியூர் ஆகிய இடங்களில் புது பள்ளி வகுப்பறை கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
11-Jun-2025