உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஹேண்ட்பால் போட்டியில் அரசு பள்ளி அசத்தல்

ஹேண்ட்பால் போட்டியில் அரசு பள்ளி அசத்தல்

மகுடஞ்சாவடி: சேலம் வருவாய் மாவட்ட அளவில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, ஹேண்ட்பால் போட்டி, சேலம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அதன் இறுதிப்போட்டியில் கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மோதின. அதில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 25 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி, 9 புள்ளிகள் மட்டும் பெற்றன. முதலிடம் பிடித்த அணியை, இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிரபு, பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 சுரேஷ்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி