மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
16-Dec-2025
ஓமலுார:தொளசம்பட்டி போலீசார், அமரகுந்தி சாலையில் நேற்று முன்தினம் காலை, வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டினர். அதன் டிரைவர், சற்று முன்னதாக லாரியை நிறுத்தி இறங்கி ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்தபோது, 3,000 ரூபாய் மதிப்பில், 3 யுனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. போலீசார், மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரித்தனர். தொடர்ந்து பெரிய சோரகையை சேர்ந்த டிரைவர் காளியப்பன், 35, டிப்பர் லாரி உரிமையாளரான குமரேசன் மீது வழக்குப்பதிந்து விசா-ரிக்கின்றனர்.
16-Dec-2025