உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏரியில் பசுமை வனம் பணி தொடக்கம்

ஏரியில் பசுமை வனம் பணி தொடக்கம்

பனமரத்துப்பட்டி, சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு நீர் பிடிப்பு இல்லாத இடத்தில், 50 ஏக்கரில், 'பசுமை வனம்' உருவாக்கப்படுகிறது. அதன் நடுவே தியான மண்டபம், வனப்பகுதி உட்புறத்தில் சாலை, மக்கள் ஓய்வு எடுக்குமிடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதனால் நேற்று, பசுமை வனம் அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன், செடிகள் நடவு செய்து தொடங்கிவைத்தனர்.முதல் கட்டமாக, 9,000 மரக்கன்றுகளை, சேலம் வனத்துறையினர் நடவு செய்கின்றனர். தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் மரங்களை பராமரித்து, பசுமை வனம் போல் உருவாக்கி, மக்கள் கண்டுகளிக்க அனுமதி அளிக்க உள்ளனர்.இதுகுறித்து கமிஷனர் இளங்கோவன் கூறுகையில், ''சனிதோறும் செடிகள் நடவு செய்து, பராமரிக்கும் பணி நடைபெறும்,'' என்றார்.மாநகராட்சி செயற்பொறியாளர் பழனி சாமி(திட்டம்), செயற்பொறியாளர் செந்தில்குமார், கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன், சேலம் கோட்ட வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை