கருப்பூர் பேரூர் செயலர் இ.பி.எஸ்.,சிடம் வாழ்த்து
ஓமலுார்: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டம் ஓமலுார் சட்டசபை தொகுதி, கருப்பூர் உப்புகிணறு பகுதியை சேர்ந்தவர் ஜீவா, 54. இவர், சேலம் புறநகர் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தார். நேற்று முன்தினம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கருப்பூர் பேரூர் செயலராக நியமித்து அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., அறிவித்தார்.இதையடுத்து ஜீவா, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில், இ.பி.எஸ்.,சை சந்தித்து பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தார். அப்போது ஓமலுார், எம்.எல்.ஏ., மணி, முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல் உடனிருந்தனர்.