உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி

குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி

சேலம், ஜன. 3-குரூப் - 4 தேர்வுக்கு இலவச பயிற்சி, வரும், 8ல் தொடங்க உள்ளது.இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 பணி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு, 2025 ஏப்., 25ல் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஜன., 8 காலை, 10:00 மணிக்கு தொடங்க உள்ளது. இப்பயிற்சி மையத்தில், முந்தைய பயிற்சியில் பங்கேற்ற, 322 பேர் அரசு பணி பெற்றுள்ளனர். அதனால் பயிற்சி வகுப்பில், விருப்பம் உள்ள தேர்வர்கள், இரு மார்பளவு புகைப்படத்துடன், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி குறித்த விபரங்களை, 0427 - 2401750 என்ற எண்ணில், அலுவலக வேலை நாட்களில் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி