மேலும் செய்திகள்
தம்பதி கொலை வாலிபருக்கு 'குண்டாஸ்'
26-Jun-2025
சேலம், சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ், 24, தட்சிணாமூர்த்தி, 23. இவர்கள் இருவரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வழக்கில், செவ்வாய்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் பரிந்துரையின் பேரில், போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நேற்று உத்தரவிட்டார். * தாரமங்கலம் அருகே கசுவரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 63. இவர் கடந்த ஜூன், 3ல் அதே பகுதியை சேர்ந்த உறவினரான மூதாட்டி ராஜம்மாள், 94, என்பவரை கரண்டியால் அடித்து கொலை செய்த வழக்கில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சேலம் எஸ்பி., கவுதம் கோயல் பரிந்துரைந்தார். அதன்படி, கலெக்டர் பிருந்தாதேவி, செல்வராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகல் செல்வராஜிடம் வழங்கப்பட்டது.
26-Jun-2025