உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மெத்தம்பெட்டமைன் விற்றவருக்கு குண்டாஸ்

மெத்தம்பெட்டமைன் விற்றவருக்கு குண்டாஸ்

சேலம்: சேலம், கருங்கல்பட்டி முதல் கிராஸ், பாண்டுரங்க விட்டல் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ், 23. இவர் கடந்த மாதம், 15ல், முள்ளுவாடி கேட் அருகே மெத்தம்பெட்டமைன் எனும் போதை பொருட்களை வைத்திருந்ததால், டவுன் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் போதை பொருட்களை வெளிமாநிலங்களில் வாங்கி வந்து, சேலம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்றது தெரிந்தது. இதனால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் உமா(பொ) நேற்று உத்தரவிட்டார்.* சேலம், திருமலைகிரியை சேர்ந்தவர் நந்தகுமார், 29. இவருக்கும் பெருமாம்பட்டி, பூசநாயக்கனுாரை சேர்ந்த, சதீஷ்குமாரின் அண்ணன் மகன் விஜய்க்கும், கடந்த மாதம், 31ல் பட்டாசு வெடிக்கும்போது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நந்தகுமார், விஜயை தேடி சதீஷ்குமார் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததோடு, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினார். தொடர்ந்து சதீஷ்குமாரையும் தாக்கினார். இரும்பாலை போலீசார் நந்தகுமாரை கைது செய்தனர். தவிர, அடிதடி தொடர்பாக, இரு வழக்குகள் உள்ளன. இதனால் இவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை