உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜி.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

ஜி.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

ஜி.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்மாநில அளவிலான போட்டிக்கு தகுதிமேட்டூர், நவ. 2-மேட்டூர், மாசிலாபாளையம் ஜி.வி., மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, ஏழு மாணவர்கள் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.சேலம் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டி, பெரியார் பல்கலை விளையாட்டு மைதானத்தில் கடந்த, 28,29ல் நடந்தது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 11 மைய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மேட்டூர், மாசிலாபாளையம் ஜி.வி., மேல்நிலைபள்ளி மாணவர் இளம்பிறை அன்பு, 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் மாணவர்கள் கபில், ஜெகதீஸ்வரன், தர்ஷன், உதயநிதி ஆகியோர் தங்கப்பதக்கம், உயரம் தாண்டுதல் போட்டியில் சுதர்சன் வெள்ளி பதக்கம், தட்டெறிதல் போட்டியில் மாணவர் லிஜிப்குமார் வெண்கல பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர், தலைவர், செயலர், இயக்குனர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ