உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலூர் சப் - டிவிஷனில் 162 துப்பாக்கி ஒப்படைப்பு

ஓமலூர் சப் - டிவிஷனில் 162 துப்பாக்கி ஒப்படைப்பு

ஓமலுார், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி ஓமலுார் சப் - டிவிஷனில் 198 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்தனர். அதில் ஓமலுாரில், 36, தீவட்டிப்பட்டியில், 48, தாரமங்கலத்தில், 15, தொளசம்பட்டியில், 10, ஜலகண்டாபுரம், 22, நங்கவள்ளியில், 32, என, 162 துப்பாக்கிகளை, நேற்று வரை, அதன் உரிமையாளர்கள் ஒப்படைத்துள்ளனர். வங்கிகள் பயன்படுத்தும் துப்பாக்கிகளை தவிர, மீதியை விரைந்து ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை