உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பா.ம.க., ஒன்றிய செயலராக தொடர்வார்

பா.ம.க., ஒன்றிய செயலராக தொடர்வார்

ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம், பெரியகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த, பா.ம.க.,வின் தெற்கு ஒன்றிய செயலர் சடையப்பன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்படி செயல்படுவதால், அவரை, கட்சியில் இருந்து நீக்கியதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் அறிவித்தார். நேற்று, அக்கட்சி தலைவர் அன்புமணி அறிக்கையில், 'பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலர் சடையப்பன், அதே பொறுப்பில் தொடர்கிறார். பா.ம.க.,வினர், அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை