உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகாதார ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

சுகாதார ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

மேட்டூர்: சாலையில் சென்று கொண்டிருந்த போது, மாரடைப்பால் சுகாதார ஆய்வாளர் இறந்தார்.மேட்டூர், துாக்கனாம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 52. இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தார். செல்வராஜ் மனைவி கலையரசி, 39, மகன்கள் ஆதித்யன், 16, கமலேஸ், 13. செல்வராஜ் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், நேற்று விடுப்பில் மேட்டூர் வந்தார். மதியம், 1:30 மணிக்கு பைக்கில் மேட்டூர் தினசரி சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். மேட்டூர் சப்-கலெக்டர் குடியிருப்பு அருகில் உள்ள சாலையை, கடக்க முயன்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். உறவினர்கள் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை