மேலும் செய்திகள்
மழையால் 2 வீட்டின் சுவர் இடிந்து சேதம்
16-Oct-2024
கனமழைக்கு 6 வீடுகள் சேதம்சேலம், அக். 20-சேலத்தில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் மதியம் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால், 50வது வார்டு சாஸ்திரி நகரில் அனைத்து சாலைகளிலும் மழைநீர் கரைபுரண்டு ஓடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர். மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, கெங்கவல்லியில், 58 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சேலம், 35.7, ஆத்துார், 37, ஏற்காடு, 25, வீரகனுாரில் 19 மி.மீ., மழை பெய்துள்ளது.மழையால் சேலம் எஸ்.எம்.சி., காலனியில் சசிகலாவுக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் ஒருபுற சுவர் இடிந்து சேதமானது. அதேபோல் காந்திமகான் தெருவில் சிவகாமி ஓட்டு வீட்டின் சுவரும் இடிந்தது. பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கீழ்நாடு ஊராட்சி மேல்பூண்டியில் கலியபெருமாளின் ஓட்டு வீடு; தலைவாசல், வெள்ளையூரில் அஞ்சலைக்கு சொந்தமான தகர வீட்டின் சுவர்; பகடப்பாடியை சேர்ந்த பெரியசாமிக்கு சொந்தமான தகர வீட்டின் சுவர்; உடையாப்பட்டி, அதிகாரிப்பட்டியில் உள்ள சதீஷ்குமார் குடிசை வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது.ஏற்காடு 'வெறிச்'ஏற்காட்டில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், சூழல் சுற்றுலா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணியர் அதிகளவில் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. படகு இல்லமும் அமைதியாக காணப்பட்டது. சிலர் மட்டும் பயண சீட்டு வாங்கியதும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
16-Oct-2024