உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் பனிமூட்டம் காற்றுடன் கனமழை

ஏற்காட்டில் பனிமூட்டம் காற்றுடன் கனமழை

ஏற்காடு, ஏற்காட்டில் சில நாட்களாக பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல், வானம் மேகமூட்டமாக இருந்தது. ஆனால் மாலை, 6:00 மணிக்கு, ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் சற்று தொலைவில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால், வாகன ஓட்டிகள் மெதுவாக ஓட்டிச்சென்றனர். ஏற்காடு முழுதும் குளிர் அதிகரித்தது. இரவு, 7:05 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கி, 7:25 வரை கொட்டி தீர்த்தது. பின் சாரல் மழையாக மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ