உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காட்டில் பனிமூட்டதுடன் கூடிய சாரல் மழை

ஏற்காட்டில் பனிமூட்டதுடன் கூடிய சாரல் மழை

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த வாரம் கடும் பணி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் ஏற்காடு உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பனிமூட்டம் விலகி மழை ஓய்ந்தது. அதை தொடர்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந்த பனிமூட்டத்தால் ஏற்காடு முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் இந்த மழையால் ஏற்காடு உள்ளூரை சேர்ந்த கூலி வேலைக்கு செல்லும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்டட தொழிலாளர்கள் வேலைக்கு போக முடியாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.மேலும் கடும் பனிமூட்டம் சூழ்ந்ததால் சாலைகளில் 5 அடி தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் உள்ளது. வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். இந்த பனி மற்றும் சாரல் மழையால் ஏற்காடு உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி