உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழைவெள்ளக்காடான கிருஷ்ணகிரி; மின் கம்பங்கள் சாய்ந்தன

சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழைவெள்ளக்காடான கிருஷ்ணகிரி; மின் கம்பங்கள் சாய்ந்தன

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால், ஆங்காங்கு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததால், நகரில் மின்தடை ஏற்பட்டது. நகரில் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.கிருஷ்ணகிரியில் நேற்று மாலை, 4:30 மணிக்கு, பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி வனத்துறை அலுவலகம், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் வீட்டின் கூரை, படிக்கட்டுகள், கார் கண்ணாடி, வீட்டின் முன்பிருந்த தற்காலிக கூடாரங்கள் சேதமாகின. பழையபேட்டை காந்தி சிலை அருகே இருந்த உயர் மின்கோபுரம் சாலையில் சாய்ந்ததில், அருகில் இருந்த இரு மின்கம்பங்கள் கீழே சாய்ந்தன. நகரின் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டதால், மக்கள் இரவில் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழையால் நகரின் பல பகுதியிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டில், 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.சாய்ந்த மின்கம்பங்களை, மின்வாரியம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டது. கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர், மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். நகரில் வைத்திருந்த பேனர்கள் காற்றில் பறந்தன. பல இடங்களில் கழிவுநீருடன் கலந்து, மழைநீர் சாலையில் ஓடியது. பழைய வீட்டு வசதி வாரியத்தில், மரம் விழுந்து பாதித்த பகுதிகளை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டார். * கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின பொதுக்கூட்டம் நேற்று மாலை நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு, பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையில், மேடை, பந்தல் சரிந்து விழுந்தன. கட்டியிருந்த பேனர்கள் காற்றில் கிழிந்தன. இதனால் நேற்று நடக்க வேண்டிய பொதுக்கூட்டம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை