உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எல்லா பெண்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

எல்லா பெண்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தல்

சேலம்:சேலத்தில், மாவட்ட நீதிமன்றம் சார்பில், 'பாலின உணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல்' தலைப்பில் விழிப்புணர்வு பயிலரங்கம், நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்றார்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி தலைமை வகித்து பேசியதாவது: சமீபத்தில், கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தை பார்த்தால், இந்த நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது என தெரியவில்லை. வயது, வித்தியாசமின்றி நடக்கும் இச்சம்பவத்தை பார்த்தால், குழந்தைகளை நாம் எப்படி பாதுகாக்க போகிறோம் என்ற அச்சம் வந்துவிட்டது. 2012ல் போக்சோ சட்டம் வந்தாலும், கள பணியாளர்கள் மட்டுமல்ல; ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர். அதனால் எல்லா பெண்களும் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, மாவட்ட வணிகவியல் நீதிபதி தீபா, கலெக்டர் பிருந்தாதேவி, மாநகர் போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, கல்லுாரி மண்டல இணை இயக்குனர் செண்பகலட்சுமி, போலீசார், நீதிமன்ற ஊழியர்கள், சட்டக்கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ