மேலும் செய்திகள்
நகை பணம் திருட்டு
16-Nov-2024
சேலம்: சேலம், ரெட்டியூர் சரவணா கார்டன், 2வது தெருவை சேர்ந்தவர் சண்முக சுந்தரம், 31. இவர் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிகிறார். கடந்த மாதம், 29ல், வீட்டை பூட்டி விட்டு சண்முகசுந்தரம் சொந்த ஊரான வாழப்பாடிக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, ஒன்பதே முக்கால் பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Nov-2024