உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மணமாகாத 27 வயது பெண்ணுடன் ஓட்டம் மணமான 24 வயது டிரைவரின் வீடு சூறை

மணமாகாத 27 வயது பெண்ணுடன் ஓட்டம் மணமான 24 வயது டிரைவரின் வீடு சூறை

ஆத்துார், ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட, 24 வயது டிரைவர், தற்போது திருமணமாகாத, 27 வயதுடைய மற்றொரு பெண்ணுடன் பழகி ஓடிவிட்டார். இதனால் அப்பெண்ணின் உறவினர்கள், டிரைவரின் வீடு புகுந்து பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினர்.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே களரம்பட்டியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன், 24. வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இடையப்பட்டியைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 22. இவரை காதலித்த மாயகிருஷ்ணன், 4 ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் மாயகிருஷ்ணன், வாழப்பாடிக்கு சென்று வந்தபோது, அங்கு மளிகை கடையில் பணியாற்றிய, துக்கியாம்பாளையத்தை சேர்ந்த மகேஷ்வரி, 27, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இரு நாட்களுக்கு முன், மாயகிருஷ்ணனுடன் மகேஷ்வரி மாயானார். இதுகுறித்து மகேஷ்வரியின் பெற்றோர் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் மகேஷ்வரியின் உறவினர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மாயகிருஷ்ணனின் வீடு புகுந்து பீரோ, கட்டில், மிக்சி, பேன் உள்ளிட்ட மின் சாதனங்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினர்.இதுகுறித்து மாயகிருஷ்ணனின் தந்தை வேல்முருகன், நேற்று மல்லியக்கரை போலீசில் புகார் அளித்தனர். அதில், 'என் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி, 13 பவுன் நகைகள், 47,000 ரூபாயை திருடிச்சென்றனர். உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என கூறியிருந்தனர். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி