மேலும் செய்திகள்
சித்தப்பாவை வெட்டியவர் கைது
20-Jan-2025
சேலம் : மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவர், அவருக்கு உறுதுணையாக இருந்த உறவினர் பெண்ணான மாற்றுத்திறனாளி வீட்டுக்கு தீ வைத்தார். இதில் மாற்றுத்திறனாளி படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே கோட்டகவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65. கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்திரா, 60. இவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு மது அருந்திவிட்டு வந்த பாலகிருஷ்ணன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து கத்தியால், இந்திரா கழுத்தை அறுத்துள்ளார். அவர் துடிதுடித்து இறந்தார்.தொடர்ந்து இந்திராவுக்கு உறுதுணையாக இருந்ததால், அதே பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி மாரியம்மாள், 67, என்பவரிடம் தகராறில் ஈடுபட சென்றார். கதவு மூடப்பட்டு, மாரியம்மாள் துாங்கிக்கொண்டிருந்தார். பாலகிருஷ்ணன், ஜன்னலை திறந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். துாக்கத்தில் இருந்த மாரியம்மாள் மீது தீப்பற்ற அலறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின் மாரியம்மாளை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 40 முதல், 50 சதவீத தீக்காயம் உள்ளதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முதல்கட்ட விசாரணையில் மனைவிக்கும், பாலகிருஷ்ணனின் உறவினருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், அதனால் பாலகிருஷ்ணனிடம், மனைவி சரிவர பேசுவதில்லை என்றும் தெரிந்தது. பேரனின் திருமணத்துக்கு கூட, இந்திரா வரவில்லை. இதுதொடர்பாக சில நாட்களாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் இந்திராவை கொன்றுள்ளார். இந்திராவுக்கு உடந்தையாக இருந்த உறவினர் மாரியம்மாள் வீட்டுக்கும் தீ வைத்துவிட்டு தப்பியுள்ளார். ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்த பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
20-Jan-2025