உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீர் நிலைகளை காக்க குரல் கொடுப்பேன்

நீர் நிலைகளை காக்க குரல் கொடுப்பேன்

சேலம்: சேலத்தில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில், 'திருமணி-முத்தாறு திருவிழா' மாநாடு நடந்து வருகிறது. அதன், 8ம் நாளான நேற்று, த.மா.கா., தலைவர் வாசன், மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:திருமணிமுத்தாறு கழிவுநீர் கலப்பால் மாசுபட்டு உண்மை முகத்-ததை இழந்து நிற்கிறது. உச்ச, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நீர்நிலைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை பெற்றிட, உதவி செய்யும் வேளையில் அதற்கு ராஜ்யசபாவில் குரல் கொடுப்பேன்.விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கக்கூடிய திருமணிமுத்தாறு காக்கப்பட வேண்டும். அகில பாரதீய சந்நியாசிகளின் இந்த முயற்சிக்கு, த.மா.கா.,வில் நான், நிர்வாகிகள், தொண்டர்கள் என்றும் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி