உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க.,வில் உழைத்தால் பலன் உறுதி; அமைச்சர் நேரு பேச்சு

தி.மு.க.,வில் உழைத்தால் பலன் உறுதி; அமைச்சர் நேரு பேச்சு

சேலம்: சேலத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமை வகித்து பேசியதாவது:லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிக ஓட்டு பெற்றதற்கு, தி.மு.க.,வினரின் கடும் உழைப்பே காரணம். அதேபோல் வரும் சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும்.தி.மு.க.,வில் உழைப்பவர்களை கண்டறிந்து அவர்களின் தேவை-களை நிச்சயம் நிறைவேற்றி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிளை செயலர்கள் செயல்பாட்டில்தான், தி.மு.க., செயல்பட்டு வருகிறது.இந்த உணர்வோடு செயல்பட்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க அனைவரும் தீவிரமாக பணிபுரிய வேண்டும். இவ்வாறு நேரு பேசினார்.எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மாநகர் செயலர் ரகுபதி, மண்டல குழு தலைவர்கள் உமாராணி, அசோகன், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ