உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனி நபர் நடிப்பு போட்டி;பள்ளி மாணவர் சாதனை

தனி நபர் நடிப்பு போட்டி;பள்ளி மாணவர் சாதனை

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி, காந்தி நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஸ்டீபன்ராஜ். இவர் கடந்த மாதம், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த கலைத்திருவிழாவில், தனி நபர் நடிப்பு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் மாநில போட்டிக்கு தேர்வானார். இதனால் அவருக்கு, பள்ளியில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது. கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் அலெக்சாண்டர், வட்டார மேற்பார்வையாளர் ராணி, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், நினைவு பரிசு வழங்கி, மாணவரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை