மீண்டும் சரண் விடுப்பு அலுவலர்கள் வலியுறுத்தல்
மீண்டும் சரண் விடுப்புஅலுவலர்கள் வலியுறுத்தல்சேலம், செப். 29-சேலத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட மாநாடு நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தல்; கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த அரசு அலுவலர்களுக்கான சரண் விடுப்பை மீண்டும் வழங்குதல்; ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில் நிலுவையில் உள்ள, 21 மாத ஊதிய நிலுவையை வழங்குதல்; சத்துணவு, அங்கன்வாடி, கிராமப்புற நுாலகர்கள், அனைத்து துறை துப்புரவு பணியாளர்கள், துப்புரவு காவலர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் எதிர்கால வாழ்வாதாரம், குடும்ப சூழல் கருதி, அவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் அமிர்தகுமார், துணைத்தலைவர் ராஜேந்திரன், பிரசார செயலர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.