பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தல்
சேலம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று, பால், பருத்தி கொட்டை, தவிடு உள்ளிட்டவையுடன் வந்து, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:தமிழகத்தில், 80 சதவீத விவசாயிகள் கால்நடை வளர்ப்பை நம்பி உள்ளனர். ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு, 60 ரூபாய்க்கு மேல் ஆவதால், கால்நடை வளர்ப்பது கேள்விக்குறியாகிவிட்டது. 25 ஆண்டாக பாலுக்குரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு, போராடி வருகின்றனர். அதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.