உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புதிய தலைமுறை சேனலை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப வலியுறுத்தல்

புதிய தலைமுறை சேனலை அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்ப வலியுறுத்தல்

சேலம், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் சேலம் ஏற்காட்டில் நடை பெற்றது. ஏற்காடு, லைன்ஸ் கிளப்பில், இரண்டு நாள் நடைப்பெற்ற கூட்டத்தில் நிர்வாகம் சார்பில் பத்து லட்சம் செட்டா பாக்ஸ் தமிழகம் முழுவதும் விநியோகிப்பது என்று தீர்மானம் நிறைவேற்ற படடது. வருகிற 2026 சட்ட சபை தேர்தலில் கேபிள் ஆப்ரேட்டர்கள் அனைவரும், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியாற்றுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தலைவர் வெள்ளைச்சாமி பொது செயலர் நாகர்கோவில் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரம் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.இந்த பொது குழு கூட்டத்தில் புதிய தலைமுறை சேனல், அரசு கேபிளில் நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து அந்த சேனல் உடனடியாக ஒளிபரப்ப வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை