மேலும் செய்திகள்
தென்மண்டல கபடி போட்டி பெரியார் பல்கலை முதலிடம்
04-Nov-2025
சேலம், சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட, 'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், மருத்துவ உதவியாளர் பிரிவு மூலம், சர்வதேச கருத்தரங்கு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி நடந்தது. பிரிவு பொறுப்பாளர் தீபிகா வரவேற்றார். டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பல்கலை பதிவாளர் நாகப்பன் தலைமை உரையாற்றினார்.லண்டன் செவிலியர் கல்லுாரி பேராசிரியை புவனேஸ்வரி, அரபு நாட்டின் ஷார்ஜா, சுகாதார அறிவியல் கல்லுாரி விரிவுரையாளர் நுார்கன் நுாரிஸ், கேரள மாநில அமிர்தா மருத்துவ கல்லுாரி அலைடு ஹெல்த் சயின்ஸ் பிரிவு உதவி பேராசிரியர் ஸ்ரீபிரசாத், அமிர்த விஷ்வ வித்யாபீட கல்லுாரி மருத்துவ உதவியாளர் பிரிவு துணைத்தலைவர் ஜித், அமெரிக்காவின் பைன்பெர்க் மருத்துவ கல்லுாரி உதவி பேராசிரியை அனிதா ஆகியோர், எதிர்கால சுகாதாரத்துறையில் மருத்துவ உதவியாளர்களின் பங்களிப்பு, மேம்பாடு குறித்து பேசினர்.பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், தொழிற்நுட்பவியலாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட விளக்க காட்சி, வினா விடை, துறை ரீதியான விளக்க காட்சிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுரேந்தர், தமிழரசி, இவாஞ்சலின், ரித்தீஷ் செய்திருந்தனர்.
04-Nov-2025