மேலும் செய்திகள்
மணல் கடத்திய லாரி பறிமுதல்
20-Sep-2025
சங்ககிரி, சங்ககிரி, செட்டிப்பட்டியில் போலி மணல் தயாரிப்பதாக, வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் துணை தாசில்தார் சண்முகம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், தேவூர் போலீசார், அப்பகுதியில் விசாரித்தனர். அப்போது, பொன்னுசமுத்திரம் ஏரி பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மண் எடுத்து, அந்த மண்ணை தண்ணீர் தொட்டியில் கொட்டி, போலியாக மணல் தயாரித்ததை கண்டுபிடித்தனர். 15 யுனிட் மண் குவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'மண்ணை தண்ணீரில் கொட்டி அதிலிருந்து மணல் எடுத்துள்ளனர். மண்ணை தண்ணீரில் கழுவும்போது அதிலிருந்த சிறு மண் துகள்களை, மணல் எனக்கூறி விற்று வந்ததும் தெரிந்தது. இதனால் மண்ணை மணலாக மாற்ற பயன்படுத்தப்பட்ட தொட்டியை இடித்துள்ளோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
20-Sep-2025