பழச்செடி, காய்கறி தொகுப்பு இலவசமாக பெற அழைப்பு
சேலம், சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் சக்கரவர்த்தி அறிக்கை:சேலம் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், கடந்த ஜூலை, 4ல் தொடங்கி நடந்து வருகிறது.இம்முகாமில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் ஊட்டச்சத்து மேலாண் இயக்க திட்டத்தில், 100 ரூபாய் மதிப்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு, 60 ரூபாய் மதிப்பில் தக்காளி, கத்திரி, மிளகாய், கொத்தவரை, வெண்டை, கீரை வகைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்பு, முழு மானியத்தில் அதாவது இலவசமாக வழங்கப்படுகிறது.விவசாயிகள், மக்கள், ஆதார் நகலுடன் பதிவு செய்து பழச்செடிகள் தொகுப்பு, காய்கறி விதைகள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.