உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தை உதவி மையத்தில் பணியாற்ற அழைப்பு

குழந்தை உதவி மையத்தில் பணியாற்ற அழைப்பு

சேலம்: சேலத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில், மாவட்ட குழந்தைகள் உதவி மையம் செயல்படுகிறது. அங்கு காலியாக உள்ள வழக்கு பணியாளர் பணியை, 18,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதற்கு, 'மிஷன் வாத்சல்யா' வழிகாட்டு நெறிமுறைப்படி தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்.அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வி தேர்வு வாரியம் அல்லது அதற்கு ஈடாக கல்வி வாரியத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த, 5ல், 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உரிய சான்றுகளை இணைத்து வரும், 31, மாலை, 5:30 மணிக்குள், 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 415, கலெக்டர் அலுவலகம், சேலம் - 636 001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகவல் பெற, 0427 - 2415966 என்ற எண்ணில் பேசலாம். விண்ணப்பத்தை, https://salem.nic.inஎன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ