மேலும் செய்திகள்
வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
28-Jan-2025
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலை அடிவாரத்தில், 102 ஏக்கரில் வலசக்கல்பட்டி ஏரி உள்ளது. அதில் தற்போது, 50 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த, 7 முதல், ஏரி பிரதான கால்வாய் வழியே பாசனத்துக்கு நீர் திறக்கப்-பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'வலசக்கல்-பட்டி ஏரியில், 50 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இந்த ஏரி மூலம், 568 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது. பிர-தான கால்வாய் வழியே தினமும் வினாடிக்கு, 8.7 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில், மார்ச், 19 வரை தண்ணீர் திறக்கப்படும்' என்றனர்.
28-Jan-2025