காப்பீடு பிரீமியம் மீதான ஜி.எஸ்.டி., குறைய வாய்ப்பு?
புதுடில்லி: லோக்சபாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்த பதில்:ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடு மீதான ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் உள்ள சிக்கல்களை முழுமையாக ஆராய, அமைச்-சர்கள் குழுவை நியமிக்க, செப்., 9ல் நடந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைத்தது.இந்த விவகாரம், அமைச்சர்கள் குழு முன் நிலுவையில் உள்ளது. ஒருவேளை, காப்பீடுகள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரியை குறைக்கும்படி கவுன்சில் பரிந்துரைத்தால், பிரீமியம் தொகை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.