மேலும் செய்திகள்
கல்லால் தாக்கி நகைக்கடை ஓனர் கொலை
28-Aug-2025
சேலம் :அயோத்தியாப்பட்டணம், சுக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 35. உடையாப்பட்டியில் நகை கடை வைத்திருந்தார். குள்ளம்பட்டி மதுக்கடை அருகே, கடந்த மாதம், 27ல் மது அருந்தியபோது, மர்ம நபர் தாக்கி காயம் அடைந்ததாக, அவரது நண்பரான, வலசையூர், சுந்தர்ராஜ் காலனியை சேர்ந்த கார் மெக்கானிக் முத்து, 36, என்பவர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். ஆனால் ஏற்கனவே ரமேஷ் உயிரிழந்தது தெரிந்தது. ரமேஷ் மனைவி நித்யா புகார்படி, போலீசார் விசாரித்ததில், ரமேஷ், முத்து இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மது அருந்த அழைத்துச்சென்று, அங்கு ரமேஷை, கல், கம்பியால் தாக்கி கொன்றதும் தெரிந்தது. முத்துவை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.
28-Aug-2025